வெப்ப பக்கவாதம் தொடர்பாக 13 சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா, மார்ச் 1 –

இவ்வாண்டில் முதல் வாரத்திலிருந்து ஒன்பதாவது வாரம் வரையில் அனல் கக்கும் கோடை பருவ நிலை தொடர்பில் 13 வெப்ப தாக்குதல் சம்பவங்களை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது. இவற்றில் நான்கு சம்பவங்கள் வெப்ப பக்கவாதமாகும். ஒன்பது சம்பவங்கள் வெப்ப தாக்குதல்களாகும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டத்துக் டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் தெரிவித்தார்.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 13 பேரும், கட்டடங்களுக்கு வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் புற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர்.

இதில் ஒருவர், தீவிர கண்காணிப்பு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாசான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்