கிளந்தானில் அடுத்த ஆண்டு முத‌ல் கோழி சண்டை போட்டி

கோத்தா பாரு, பிப்ரவரி 25 –

அடுத்த ஆண்டு முதல் கிளந்தானில் சுற்றுப்பயணிகளை கவரும் ஒரு முன்னெடுப்பாக கோழிகளை சண்டைக்கு விடும் போட்டி நடக்கவிருக்கிறது.

இந்த போட்டி இம்மாநில மக்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்றே என்பதுடன் அதனை பொழுதுபோக்காகவும் வைத்திருக்கிறார்கள் என்று கிளந்தான் சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய குழுவின் தலைவர் டத்தோ காமாருடின் ம்.டி னோர் தெரிவித்தார்.

இத்திட்டம் கிளந்தான் பகுதியில் பார்வையாளர்களை கவரும் வகையில் இருப்பதுடன் பிற மாநிலங்களிலும் பாரம்பரியமாக மாறி வருகிறது என்று காமாருடின் னோர் விளக்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியை ஒரு குறிப்பிட்ட கழகம் ஏற்பாடு செய்து வருவதுடன் தாய்லாந்து உட்பட நாடு முழுவதிலும் இதற்கு ஏராளமான இரசிகர்கள் இருப்பதால் இத்திட்டத்தை மாநில அரசாங்கத்தினால் உருவாக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக காமருடின் ம்.டி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்