பி. பி. ஜே பசார் ரமாடான்னை உன்னிப்பாக கவனிக்கும்

புத்ராஜெயா, பிப்ரவரி 25 –

புத்ராஜெயா வில் உள்ள Bazar Ramadan தளங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் Putrajaya கழக மைய பணிக்குழுவினரால் கண்காணிக்கப்படு வதுடன் இவை முந்தைய உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அதன் தலைவர்டத்தோ பாட்லுன் மாக் ஊஜுட் தெரிவித்தார்.

அடுத்த வாரம் உணவு தயாரிப்பினை குறித்து 700 பாசார் ரமடான் வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்று பாட்லுன் மாக் கூறினார்.

சில சமயங்களில் வியாபாரிகள் மாலை நேரத்தில் உணவுகளை தயார் செய்து வைத்து விடுவதுடன் அதனை அதிக நேரத்திற்கு விற்பனை செய்யும் பொழுது வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தை பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் விதிமுறைகளை மீறும் வணிகர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பாட்லுன் மாக் அறிவித்தார்.

உணவு தயாரிப்பின் தரத்தை பொறுத்தவரையில் மக்களுக்கு எந்த வகையிலும் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் கடமைகளில் பிரதான ஒன்று என நேற்று பாட்லுன் மாக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்