கிளந்தான் மக்களுக்கு 5 கோடி வெள்ளி நிவாரண நிதி

கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் வெள்ளி நிவாரண நிதி உதவி வழங்கும் வகையில் 5 கோடி வெள்ளி தொடக்க நிதி உதவித் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தவிர தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA மூலமாக இதர நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக கிளந்தான் மக்களுக்கு உதவிகள் நல்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்காக இதுவரையில் 5 கோடி வெள்ளி நிதி உதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

இன்று கிளந்தானுக்கு வருகை புரிந்து வெள்ள நிலைமையை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்