தம் மீது லஞ்ச ஊழல் விசாரணையா? பிரதமரை சாடினார் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்

தம் மீதும், தமது குடும்பத்தின் மீதும் தொடங்கப்பட்டுள்ள லஞ்ச ஊழல் மீதான விசாரணை தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்- மையும் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் சாடியுள்ளார்.

இது தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஒரு வேட்டையாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய சகாவான டைம் ஜைனுதீன் குறிப்பிட்டார்.

சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக டைம் ஜைனுதீன் – க்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரவதாகவும், அவரின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூரில் உள்ள 270 கோடி வெள்ளி மதிப்புள்ள 60 மாடி கோபுரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்மெஸ்.பி.ஆர்.எம் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அண்மையில் அறிவித்து இருந்தார்.

எனினும் தனக்கு எதிராக எம்மாதிரியான குற்றச்சாட்டுகளை எஸ்.பி.ஆர்.எம் கொண்டுள்ளது என்பது குறித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் அனுப்பியும், இதுவரையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையை அந்த ஆணையம் விளக்கவில்லை என்று வயதான டைம் ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்