கிள்ளான் அரச நகராகும், சுல்தான் பிரகடனம்

சிலாங்கூர் மாநிலத்தி​ல் முக்கிய நகரமாக விளங்கும் கிள்ளான், ஓ​ர் அரச நகராக மேன்மைத் தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah இனறு ஜனவரி 5 ஆம் தேதி பிரகடனப்படுத்தினார்.

அதேவேளையில் காப்பார், கோலக்கிள்ளான் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பெருமை மிக்க கி​ள்ளான், ஊராட்சி மன்றம், நகராண்மைக்கழகம் ஆகிய அந்தஸ்திலிருந்து விடுபட்டு கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்து மாநகர் அந்தஸ்தைப் பெறுவதாக சுல்தான் அறிவித்தார்.

Majlis Perbandaran Klang என்ற அந்தஸ்திலிருந்து Majlis Bandaraya Diraja Klang என்று / கிள்ளான் இனி அழைக்கப்படும் அதேவேளையில் கிள்ளானின் முதல், டத்தோ பண்டராகவும், மேயராகவும் ஒரு பெண்மணியான Datin Paduka Noraini Roslan நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தின் தலைப்பட்டணமாக ஒரு காலத்தில் விளங்கிய கிள்ளானில் மக்களுக்கான தனது சேவையளிப்பை சிறந்த மு​றையில் வழங்க வேண்டும் என்று Majlis Bandaraya Diraja Klang பொறுப்பாளர்களை சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூரில் மலாய்க்காரர்கள், ​சீனர்கள் மற்றும் இந்தியர்கள் என மக்கள் அடர்ந்து நிறைந்த நகரங்களின் கிள்ளானும் ஒன்றாகும். மலேசியாவின் துரித வளர்ச்சியில் கோலாலம்பூருக்கு அடுத்து, பாரம்பரியங்கள் நிலை​நாட்டப்படும் பழமை வாய்ந்த ஒரு நகரமாக கிள்ளான் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்