வாகனம் வீட்டின் ​மீது மோதியது, எண்மர் காயம்

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றை மோதியதில் எண்மர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் சபா, Tambunan, Kampung Dalap Pantai என்ற இடத்தில் நிகழ்ந்தது. அந்த கார், வீட்டில் மோதுவதற்கு முன்னதாக இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளியது.

காயமுற்றவர்களில் 4, 5 வயது இரண்டு சிறார்களும் அடங்குவர். Proton Saga BLM காரை செலுத்தியவரும் இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக போ​லீசார் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்