குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகள்

தேசிய நிர்வாக மையம் குடியிருப்புவாசிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு தோட்டத்திற்குள் நகரம் என்ற கருத்தினை அமைத்து வருகிறது.

தயார் நிலையில் இருக்கும் பூங்காக்களை திறப்பதன்வழி மறைமுகமாக இவை வனவிலங்குகளுக்கு ஒரு வீடாக மாறி வருவதுடன் தங்கும் இடமாகவும் விளங்குகிறது.

அத்தகைய கருத்துக்களை பாதுகாக்கப்பட்டு வந்தாலும் தற்போது அரசு ஊழியர்களின் குடியிருப்புகளான Presint 15 -யில் வனவிலங்குகள் ஓர் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.

குரங்குகள் குப்பை தொட்டிகளின் வழியாக சென்று குப்பைகளை அசுத்தம் படுத்துவதுமட்டுமின்றி வாகனங்களையும் குழந்தைகளையும் பாதிப்படைய செய்வதாக குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

இப்பிரச்னைகளை கையாள்வதற்கு Perbadanan Putrajaya (PPj) குப்பைகள் கொட்டும் இடத்திற்கு அருகில் பெரிய பொறி ஒன்றை வைத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்