கே.பி.டி.என் டீசல் கடத்தல் கும்பலை முறியடித்தது

அலோர் ஸ்டார், ஜன 29 –

கெடா உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவீன அமைச்சகம் கே.பி.டி.என் சுங்கை பட்டாணியில் ஒரு லாரியை கைப்பற்றியதன் மூலம் டீசல் மோசடி கும்பலை வெற்றிகரமாக முறியடித்தது.

நேற்று காலை 9:50 மணியளவில் நடந்த இத்திடீர் சோதனையில் சுங்கை பட்டாணியைச் சுற்றியுள்ள பல பெட்ரோல் நிலையங்களில் இரண்டு டன் எடை கொண்ட லாரி ஒன்று டீசல் எரிபொருளை வாங்கியதாக கெடா உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவீன அமைச்சகத்தின் இயக்குநர் அஃபெண்டி ரஜினி காந்த் தெரிவித்தார்.

அந்த லாரி அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்படுவதற்கு முன் முதல் பெட்ரோல் நிலையத்தில் 200 வெள்ளி, இரண்டாம், மூன்றாம் பெட்ரோல் நிலையத்தில் 150 வெள்ளி மதிப்பிலான டீசல் எரிபொருளை வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளன.

40 வயதுடைய லாரி ஓட்டுநரிடமிருந்து 16,500 வெள்ளி மதிப்பிலான இரண்டு யூனிட் எண்ணெய் பம்புகள், தொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்நபர் தடுப்பு காவலில் வைக்கபட்டுள்ளதாக அஃபெண்டி ரஜினி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்