குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா?

இந்தியா, ஏப்ரல் 25-

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடிக்க உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த திரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கினார் ஆதிக். இந்தப்படம் அட்டர் பிளாப் ஆனதை தொடர்ந்து பிரபுதேவா உடன் கூட்டணி அமைத்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் நடித்த பஹீரா என்கிற சைக்கோ திரில்லர் திரைப்படத்தை ஆதிக் இயக்கி இருந்தார்.

பஹீரா படமும் பிளாப் ஆன நிலையில் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் ஆதிக். அப்போது அஜித்துடன் நெருங்கி பழகி வந்த ஆதிக்கிற்கு அஜித் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாராம். அதில் ஒன்று தான் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்க சொன்னது. உடனே மார்க் ஆண்டனி கதையை கூறி, விஷாலை வைத்து இப்படத்தை எடுக்க உள்ளதாக கூறியது அஜித் அவரை வாழ்த்தி சூப்பர் என சொன்னாராம்.

அஜித் தந்த உத்வேகத்தால் கடினமாக உழைத்த ஆதிக்கிற்கு மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. அப்படம் கடந்தாண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொண்ட ஆதிக்கிற்கு, கல்யாண பரிசாக வந்தது தான் அஜித்தின் 63வது படத்தை இயக்கும் வாய்ப்பு. அந்த படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளனர். விறுவிறுவென ஷூட்டிங்கை நடத்தி முடித்து படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க குட் பேட் அக்லி படத்தில் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்