குற்றசெயல்களுக்கு Colombia- வைப் போல் கிள்ளான் – மக்களிடையே அச்சம் அதிகரிக்கிறது

குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் கிள்ளான் நகர், கொலம்பியா நாட்டுடன் உவமை காட்டப்பட்டு இருப்பது குறித்து உள்ளூர் வாசிகள் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிள்ளானில் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு போலீஸ் துறை மேலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் பரவலாக குற்றச்செயல்கள் அதிகரித்த போதிலும் கிள்ளான் நகரில் குற்றச்செயல்களின் பதிவு அதிகமாக இருப்பதாகவும், கொலம்பியா நாட்டை உவமைக்காட்டும் அளவிற்கு கிள்ளாள் விளங்குகிறது என்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்துள்ளார்.

கிள்ளான் ஹோக்கியான் சங்கத்துடன் இணைந்து உள்ளூர் மக்களுடன் Town Hall சந்திப்பை நடத்திய Mohd Shuhaily, கிள்ளானில் குற்றச்செயல்கள் மட்டும் உயரவில்லை. மாறாக, அது கொலம்பியாவைப் போல் சித்தரிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதன் காரணமாகவே தாம் நேரடியாக கிள்ளானுக்கு களம் இறங்கி, மக்களை சந்திக்க வேண்டியதாயிற்று என்று Mohd Shuhaily தெரிவித்து இருந்தார்.

கிள்ளான் நகர் மீது போலீசார் கொண்டுள்ள அக்கறையை இது பிரதிபலித்தாலும், குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கு மேலும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை போலீஸ் துறை ஆராய வேண்டும் என்று கிள்ளன் வாழ் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்