வீடு சரி செய்யும் வரை நிவாரண மையத்தில் இருத்தல்

டுங்ஙுன் – னில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த வீடுகள் தற்போது துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் 473 பேர் இன்னமும் நிவாரண மையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

157 குடும்பங்கள் தற்காலிகமாக Dewan Serbaguna Kampung Shukor மற்றும் Dewan Orang Ramai Kampung Pasir Raja- வில் இருப்பதாக திரங்கானுவில் உள்ள மலேசிய குடிமை தற்காப்பு படையின் துணை இயக்குநர் மேஜர் முஹமாட் ஹஃபிஸ் அசிகின் தெரிவித்தார்.

பல்வேறு நிறுவனங்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்போது தூய்மைப்படுத்தி வருவதாக முஹமாட் ஹஃபிஸ் அறிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பேரிடரினால் Kampung Shukor, Kampung Pasir Raja ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்