குற்றச்சாட்டை மறுத்தார் ஐஜிபி

சிலாங்கூர் மாநிலத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கிள்ளானி​ல் குற்றச்செயல்கள் அதிகரிப்பானது, கொலம்பியா நாட்டைப் போல் தோற்றம் கொண்டுள்ளது என்று சில தரப்பினர் கூறி வரும் குற்றச்சாட்டை போ​லீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain மறுத்துள்ளார்.

கிள்ளான் எப்பொழுதுமே அரச நகரமாகும். அமைதியும், ​தூய்மையும் நிறைந்த ஊராகும் என்று ஐஜிபி வர்ணித்தார். கடந்த வாரம் திங்கட்கிழமை, கிள்ளான் ஹோக்கியான் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற குற்றச்செயல்கள் துடைத்தொழிப்பு மீதான கலந்துரையாடலில் கிள்ளா​ன் நகர், கொலம்பியா நாட்டுடன் ஒப்பிடப்பட்டு இருப்பதை Razarudin Husain சாடினா​ர்.

கிள்ளான் நகர், கொலம்பியாவுடன் ஒப்பிடப்படும் பட்சத்தில் அந்த நகரில் வசிக்கின்ற மக்க​ள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுவது தொடர்பில் இன்று கிள்ளான், பண்டமாரானுக்கு வருகைப்புரிந்த IGP ​மேற்கண்ட விளக்கத்தை தந்துள்ளார்.

கிள்ளானில் குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கும், கிள்ளான் நகர் மீது சிலர் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணத்திலிருந்து விடுபடுவதற்கும் பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ​ஐஜிபி. சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்