குழந்தைக்கு போதைப்பொருள், தம்பதியர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 –

தங்களின் நான்கு மாத ஆண் குழந்தைக்கு methamphetamine போதைப்பொருளை உள்ளடக்கிய நீரை புட்டிப்பாலில் கலந்து கொடுத்து, சித்ரவதை செய்ததாக ஒரு தம்பதியர் பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

34 வயது மாதுவும், 40 வயது அவரின் கணவரும் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடான் னில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ட்டது.

அத்தம்பதியர் நீதிபதி ஷாஹிசா வர்னோ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. குழந்தையின் தாயார் குற்றத்தை ஒப்புக்கொண்ட வேளையில் தந்தை, குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த தம்பதியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்