குழாய் இணைப்பு பணி முன்னதாகவே முடிந்தது

சுங்ஙாய் பேராவில் பைப்லைனை மாற்றுவதற்காக 600 மில்லிமீட்டர் அளவிலான இரண்டு குழாய்கள் இணைக்கும் பணி இன்று அதிகாலையில் முழுமையாக நிறைவடைந்தது.

நேற்று இரவு 11:30 மணியளவில் தொடங்கிய இப்பணி இன்று மதியம் 2 மணியளவில் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டதை விட முன்னதாகவே முடிக்கப்பட்டது என்று பினாங்கு நீர் விநியோக வாரியம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

வடகிழக்கு, தென்மேற்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 120,000 பயனர்களில் 84 சதவீதம் நீர் விநியோகத்தை மீட்டெடுப்பது முன்னதாகவே தொடங்கப்பட்டு நாளை பிற்பகல் 3:30 மணியளவில் முடிவடையும் என்று நம்பப்படுகின்றது.

அதே வேளையில் மீதமுள்ள 16 விழுக்காட்டினருக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் நீர் விநியோகம் சீராக கிடைக்கபெறும் என்று அந்த அறிக்கையில் PBAPP அறிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்