விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார்

ஈப்போ,ஜன.31
பாகான் செராய் அருகிலுள்ள கம்போங் மாத்தாங் ஜெலுத்தோங், ஜாலான் அலோர் பொங்சுவில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் படுங்காயம் அடைந்த வேளையில் 5 வயதுடைய சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 9:41 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பேராவின் மலேசிய தீயணைப்பு, மீட்பு துறையின் துணை இயக்குநர் சபாரொட்சி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

ப்ரோத்தோன் பெர்சோனா ரக வாகனத்தை ஓட்டி வந்த நபர் 32 வயதுடைய பெண் உட்பட மூன்று பேர் சென்ற மோட்டார் சைக்கிளை பின்புறத்திலிருந்து மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக சபாரொட்சி நோர் ஓர் அறிக்கையில் கூறினார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட மூவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தினால் மருத்துவமனையில் சேர்க்கபட்ட வேளையில் சிறுமி மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்