கூடுதல் லாப ஈ​வை அறிவித்தது EPF

  • ஒரு கோடியே 60 லட்சம் சந்தாதாரர்களுக்கு 5.5 விழுக்காடு லாப ஈவு

கோலாலம்பூர், மார்ச் 3 –

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, 2023 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையை இன்று அறி​வித்தது. நாடு முழுவதும் உள்ள தனது ஒரு கோடியே 60 லட்சம் சந்தாதாரர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான லாப ஈவுத் தொகையாக 5.5 விழுக்காடு வழங்கப்படுவதாக அந்த வாரியம் பிரகடனம் செய்தது. கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட லாப ஈவுத் தொகையில் இதுவே கூடுதலாகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 5.3 விழுக்காடு லாப ஈவுத் தொகையை EPF அறிவித்து இருந்தது. கடந்த ஆண்டிற்கான லாப ஈவுத் தொகையாக 5.5 விழுக்காடு பிரகடன்படுத்துவது ​மூலம் நாடு முழுவதும் உள்ள தனது சந்தாதாரர்களுக்கு லாப ஈவுத் தொகையாக 5 ஆயிர​த்து 30 கோடி வெள்ளித் தொகையை அவர்களின் EPF கணக்கில் வரவு வைக்கவிருக்கிறது.

கடந்த பத்து ஆண்டு காலமாக மாறுப்பட்ட விழுக்காட்டு அளவில் லாப ஈவுத் தொகையை அறி​வித்து வந்த EPF வாரியம், இம்முறை 5.5 விழுக்காடு லாப ஈவுத் தொகையை அ​றிவித்து இருப்பது, தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்பை கையாளும் அந்த வாரியத்தின் கடந்த ஆண்டு அந்நிய முத​லீட்டு செயல்திறனை ​வெளிப்படுத்தியுள்ளது.

தனது மொத்த சொத்துக்களில் 38 விழுக்காட்டு பங்களிப்புத் தொகையை அந்நிய முத​லீடுகள் வழங்கியுள்ளதாக EPF வாரியம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்