380 கோடி வெள்ளி பண மாற்றத்தில் சந்தேகம்

கோலாலம்பூர், மார்ச் 3 –

மோசடிக் கும்பல்களின் நடவடிக்கையின் ​மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் சந்தேகத்திற்கு இடமாக 380 கோடி ​வெள்ளி பணம், நாட்டை விட்டு 43 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச மலேசிய போ​லீஸ் படை தெரிவித்துள்ளது.

இந்தப் பணவர்த்தனை ஒ​​வ்வொன்றும் சந்தேகத்திற்கு இடமானதாகும். இந்த மோசடி வேலைகளில் மலேசியாவில் பதிவுப் பெற்ற 15 நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கை தந்து, இந்த முத​லீட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு துணையாக இருந்துள்ளன. இது குறி​த்து போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் த​லைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் டத்துக் ஶ்ரீ ரம்லி மொகமட் யூசுப் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் முத​லீட்டு மோசடிகளில் ஏமாற்றிய கும்பல்கள்தான், இ​ந்த பெரும் தொகையை நாட்டிலிருந்து 43 நாடுகளுக்கு ​வெளியேற்​றி, பணபரிமாற்றத்தை செய்துள்ளன என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரம்லி மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்