கூட்டுறவு நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாததாகும்

கோலாலம்பூர்,மார்ச் 4 –

வெற்றிகரமான இலக்கை அடைய சமூகத்தின் கூட்டு முயற்சியோடு, அரசாங்கத்தின் தார்மீகமான ஆதரவும்
கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றன என்று பெரியார் கூட்டுறவு நிறுவனத் தலைவர் “முனைவர்” பெரு.அ.தமிழ்மணி, அக்கூட்டுறவு நிறுவனத்தின் 15- ஆம் ஆண்டுப் பேராளர் கூட்டத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தன்மானப் பேராசான் பெரியார் பெயரிலான அக்கூட்டுறவு நிறுவனத்
தின்-15-ஆம் ஆண்டுப் பேராளர் கூட்டம், நேற்று, கோலாலம்பூர், மட்ராஸ் கெபி யில்,நடைபெற்ற போது, அதன் தலைவர்
முனைவர்- பெரு.அ.தமிழ் மணி மேற்கண்டவாறு கூறினார்.

50- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த பேராளர் கூட்டத்தில், 2024 -2025 ஆம் ஆண்டுக்கான இயக்குனர் வாரிய உறுப்பினர்கள் போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, தலைவராக முனைவர் பெரு.அ.தமிழ்மணி, துணைத் தலைவராக த.பரமசிவம், செயலாளராக சி.மு.விந்தைக்குமரன் துணைச் செயலாளராக சரவணன், பொருளாளராக செ.தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இயக்குநர் வாரிய உறுப்பினர்களாக டத்தோ.மனோ, மு.மணிமாறன் பனிமலர் பி.கோவிந்தசாமி, மூர்த்தி, க.ப.சுப்பையா அருள்எழில் ஆகிய எழுவரும், உட்கணக்காய்வாளர்களாக த.சுப்பையா மற்றும் வீ.நேயமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டுறவுக் கழகத்தின் நல்லுரையாளராக பொருளியலாளர்
இரா.மாசிலாமணி நியமனம் செய்யப்பட்டதோடு, பங்குத்தாரர்களுக்கு பங்குப் பத்திரமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஆண்டு அறிக்கையோடு, கணக்கறிக்கையும் ஏகமனதாகப் பேராளர்களால் ஏற்கப்பட்டது. அத்துடன் வரும் ஆறு மாதத்திற்
கான, உத்தேசக் கணக்கு முன்னோட்டமும் கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் துணைச்செயலாளர் சரவணனின் நன்றியு
ரையோடு கூட்டம் நிறைவு பெற்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்