வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு, விவகாரத்திற்கு வழிகோலிடுகிறது

பெட்டலிங் ஜெயா, மார்ச் 4 –

கணவன், மனைவி மணமுறிவு சம்பவங்கள், சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த மணமுறிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களாகும் என்று மாநில .இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் பஹ்மி ஙகா தெரிவித்துள்ளார்.

வாழ்க்சைச்செலவின உயர்வினால் தாங்கள் பெறுகின்ற சம்பளம் போதவில்லை என்பது பெரும்பாலான குடும்பங்களின் முக்கிய அங்கலாய்ப்பாக இருக்கிறது. அதிகரித்து வரும் செலவினத்தை ஈடுசெய்வற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை கணவனும், மனைவியும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதன்விளைவு, பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைந்து,, கணவன் மனைவிக்கும் இடையிலான நெருக்கம் குறைந்து, குடும்ப ரீதியாக இருவருமே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் மண முறிவே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று மொகமட் பஹ்மி ங்கா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்