கோம்பாக், காராக் டோல் சாவடி அகற்றப்படாது

கோலாலம்பூர், மார்ச் 7 –

நாட்டின் முதலாவது நெடுஞ்சாலையான கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையின் டோல் சாவடிகளை அகற்றும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று பொதுப்பணித்துறை அ மைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் னந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு கரை மாநிலங்களுக்கு செல்லும் அந்த நெடுஞ்சாலையின் கோம்பாக் மற்றும் காராக் டோல் சாவடிகள் அகற்றப்படுமானால் அந்த நெடுஞ்சாலையை பராமரிப்பதில் அதிக செலவினத்தை அரசாங்கம் ஏற்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த நெடுஞ்சாலை அகற்றப்பட வேண்டும் என்று கடந்த மார்ச் 4 ஆம் தேதி பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் முன்மொழிந்துள்ள பரிந்துரை தொடர்பில் அலெக்சண்டர் நந்தா லிங்கி எதிர்வினையாற்றினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்