கோம்பாக், காராக் நெடுஞ்சாலை டோல் அகற்றப்பட வேண்டும்

கோம்பாக், மார்ச் 4 –

கிழக்கு கரை மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான கோம்பாக் மற்றும் காராக் நெடுஞ்சாலையின் டோல் கட்டண சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்று பாஸ் கட்சித் துணைத் தலைவரும், குபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினருமான துவான் இப்ராஹிம் துவான் மாட் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூருடன் பகாங், திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களை இணைக்கும் அந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க கோம்பாக், காராக் ஆகியவற்றின் பலாசா டோல் சாவடிகள் அகற்ப்பட வேண்டும் என்று அந்த பாஸ் கட்சி எம்.பி. இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதற்கு அப்பாற்பட்ட நிலையில் வாகனமோட்டிகளுக்கு நிதி சுமையையும் அந்த டோல் சாவடிகள் ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோலாலம்பூரையும், காராக்கையும் இணைக்கும் கோம்பாக், காராக் நெடுஞ்சாலையின் டோல் சாவடிகளை அகற்றுவதற்கு காலம் கனிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். 60 கிலோ மீட்டர் துரத்தைக் கொண்ட அந்த நெடுஞ்சாலையை தற்போது அனி பெர்ஹாட் ஒப்பந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்