துன் டாயிம் குடும்பத்தினர் தோல்விக் கண்டனர்

கோலாலம்பூர், மார்ச் 4 –

தங்கள் குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மிற்கு எதிராக முன்னாள் நிதி அமைச்சர் துன் டாக்டர் டாயிம் சைனுடின் குடும்பதத்தினர் தொடுத்துள்ள வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.

துன் டாயிம் குடும்பத்தினரின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அதன் நீதிபதி டத்துக் வான் அகமட் பர்டி வான் சாலெ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஸ்.பி.ர்.ம் போன்ற அமலாக்கத் தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெவித்தார்.

86 வயது துன் டாயிம் அவரின் 67 வயது மனைவி தொ புவான் னை மா காலிட் மற்றும் நான்கு பிள்ளைகள் ஆகியோர் ஸ்.பி.ர்.ம் மிற்கு எதிராக இந்த வழக்கை தொடுத்து இருந்தனர். துன் டாயிம் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் டோமி டோமஸ் ஆஜராகியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்