கோலகுபு பாரு இடைத் தேர்தல் இந்தியர்களும் Orang Asli-யும் வெற்றியை நிர்ணயிப்பர்

ஷாஹ் அலாம், ஏப்ரல் 26-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவர்களாக தொகுதியை சேர்ந்த இந்திய வாக்காளர்களும், Orang Asli- யும் திகழ்கின்றனர் என்று பெரிக்காத்தான் நேஷனலின் முக்கிய உறுப்புக்கட்சியான பெர்சத்து கூறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் யார் வெற்றிப்பெறப் போவது என்பதை முடிவு செய்வது இந்திய மற்றும் Orang Asli வாக்காளர்களின் கைகளில் உள்ளது என்று Bersatu கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

இந்திய மற்றும் பூர்வக்குடி இனத்தை சேர்ந்த வாக்காளர்கள் 6,280 பேர் இருக்கின்றனர். இவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அந்த கட்சியே இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரசாலி இட்ரிஸ் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு, கல்வி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சமூக நலன், எதிர்காலம் போன்ற முக்கிய விவகாரங்களில் இந்திய சமுதாயத்தையும், பூர்வகுடியினரையும் ஒற்றுமை அரசாங்கம் ஓரங்கட்டி வருகிறது.

இந்திய வாக்காளர்கள் மஇகாவை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று நினைக்கும் அவர்கள், பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதற்கான நேரம் கனிந்து விட்டதாக நம்புகின்றனர்..

குறிப்பாக மக்கள் நலனை உரக்க பேசுவதிலும் வாதிடுவதிலும் உறுதியாக இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மீது இந்திய வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என்று டத்தோ ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்