கோல குபு பாரு இடைதேர்தலுக்கு தலைமையேற்க, ஜாம்ப்ரி, ஸ்டீவன் சிம் நியமனம்

ஷாஹ் அலாம், ஏப்ரல் 18-

அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கு தலைமையேற்க, ஒற்றுமை அரசாங்கம் இரு முக்கிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.


சம்பந்தப்பட்ட தேர்தலை எதிர்கொள்வதற்கான தேர்தல் பணிப்படைகளை வழிநடத்த தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர்-ரும் அவருக்கு துணையாக டிஏபி-யின் அமைப்பு செயலாளர் ஸ்டீவன் சிம் சீ கியோங்-கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய ஒற்றுமை அரசாங்கத்தின் செயலக தலைவர் டத்தோ அசிராப் வாஜ்டி டுசுகி, வரும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் பல்லின மக்களின் நலன்களை பேணும் வகையில் மிதவாத அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட, அரசாங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளும் உறுதிகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அதன் வழி, வாழ்க்கை செலவின அதிகரிப்பு, தரம் வாய்ந்த வேலை வாய்ப்புகள், நாட்டின் பொருளாதார நிலைத் தன்மை உள்ளிட்ட கொள்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த முடியுமென அசிராப் வாஜ்டி கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்