சட்டவிரோத குடியேறிகளுக்கான தாயகம் திரும்பும் திட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வீர்

புத்ரா ஜெயா, மார்ச் 1 –

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், பயண ஆவணமின்றி அல்லது அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக தங்கி விட்ட அந்நிய நாட்டவர்கள், இன்று மார்ச் முதல் தேதியிலிருந்து தொடங்கியுள்ள அந்நிய நாட்டவர்களுக்கான தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியோன் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள இத் திட்டத்தின் கீழ் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் தங்களுக்கான 500 வெள்ளி அபராதத் தொாகையை குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் செலுத்தி விட்டு, தாயகத்திற்கு உடனடியாக திரும்பும்படி அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் வலியுறுத்தினார்.

500 வெள்ளி அபராதத் தொகையை செலுத்திவிட்டு நாடு திரும்ப தயாராக உள்ள சட்டவிரோதத் குடியேறிகள் மீது மலேசிய அரசாங்கம் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காது என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்