சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறில்லை

நீலாய், மார்ச் 4 –

கற்றல், கற்பித்தல் துறையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டி முறையை மீறாமல் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நோக்கத்திற்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது, ஆசிரியர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்வார்களேயானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது, வரம்புமீறி விடாமல், கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கு உட்பட்டே அவர்களின் நடவடிக்கை அமைந்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் கவன ஈர்ப்புக்காக தான்தோன்றித்தனமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது புகார் கிடைக்குமானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்லினா சிடெக் எச்சரித்துள்ளார்.

தாங்கள் கொண்டுள்ள தொழிலின், புனிதத் தன்மையை ஆசிரியர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்