மலேசிய விமானம் MH370 தொடர்பான விசாரணை அறிக்கையை மீண்டும் திறப்பதற்கு மலேசியா தயாராக உள்ளது

மெல்போர்ன், மார்ச் 4 –

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல்போன மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம் கண்டு பிடிக்கப்படுவதற்கு வலுவான புதிய ஆதாரங்கள் இருக்குமானால் அந்த மலேசிய விமானம் தொடர்பான விசாரணை அறிக்கையை மீண்டும் திறப்பதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

MH370 விமானம், மக்கள் சார்ந்த ஒரு விவகாரம் என்பதால் அந்த விமானத்தை கண்டுபிடிப்பதிலும், விசாரணை செய்வதிலும் மலேசியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாாக இருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மெல்போர்ன் னில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese னை சந்தித்தப் பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

239 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் இன்று வரையில் விடை காண முடியில்லை.

வரும் மார்ச் 8 ஆ ம் தேதியுடன் பத்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதில் கூட்டு கடப்பாட்டை கொண்ட நாடு என்று முறையில் ஆஸ்திரேலியாவுடன் பிரதமர் இது தொடர்பாக விவாதித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்