சமையல் எண்ணெய் குறித்து 10 புகார்கள் பெறப்பட்டன

கெடா, ஏப்ரல் 08-

கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் இம்மாதம் தொடக்கத்திலிருந்து பாக்கெட்டு சமையல் எண்ணெயை குறித்து மக்களிடமிருந்து புகார்களை பெற்றிருப்பதாக அவ்விலாகாவின் தலைவர் முகமாட் நிஜாம் பின் ஜமாலுடின் தெரிவித்தார்.

அலோஸ்டார் , சுங்கைப்பட்டாணி மற்றும் கூலிம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்த சமையல் எண்ணெய் குறித்து 10 புகார்கள் பெறப்பட்டிருந்த போதிலும் அதில் மூன்று புகார்கள் மட்டுமே உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருப்பத்தாக நிஜாம் தெரிவித்தார்.

அதில் சமையல் எண்ணெய் விற்பனைக்கான உரிமை இல்லாதவை , விலை ஏற்றம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வியாபாரிகள் சுய நிபந்தனைகள் அடிப்படையில் விற்பனைச் செய்தவை அடங்கும் என்பதுடன் இதர 7 புகார்களில் எவ்விதமான குற்றங்களும் இடம் பெறவில்லை என்று நிஜாம் ஜமாலுடின் குறிப்பிட்டார் .

நோன்பு பெருநாளை முன்னிட்டு, நேற்று சுங்கைப்பட்டாணி மைடின் பேரங்காடியில், கெடா மாநில அளவிலான பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்தப் பின்பு மேற்கண்டவாறு அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்