காலணியை குறித்து எட்டு புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

அரபு மொழியில் அச்சிடப்பட்ட ”அல்லா” என்ற சொல்லை குறிக்கும் சின்னத்துடன் காலணிகளை தயாரித்து விற்பனை செய்த உள்ளூர் நிறுவனத்தை தொடர்ந்து இதுவரையில் 8 புகார்கள் காவல்துறைக்கு கிடைக்க பெற்றதாக தெரியவந்துள்ளது.

நேற்று ஜொகூர், பகாங், திரெங்கானு, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களிலிருந்து இக்காலணி குறித்து புகார்கள் பெறப்பட்டிருப்பதாக போலீஸ் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

குற்றவியல் சட்டம் 298 பிரிவு, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 -யின் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிட்டிருக்கும் சர்ச்சைக்குரிய காலணியைக் குறித்து முன்பாகவே விசாரணை அறிக்கையை திறந்திருப்பதாக ரசாருதீன் ஹுசைன் மேலும் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்