சரவாக் துணை அமைச்சரின் வீடு தீயில் எரிந்து கருகியது

கூச்சிங், ஏப்ரல் 15-

சரவாக், பாரியோ, கம்புங் ப’ உமோர்- ரில் உள்ள முழு சட்டமன்ற உறுப்பினர் கேரவாத் காலா -வின் வீடு தீயில் எரிந்து கருகியது.

நேற்று நள்ளிரவு 1.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக தீயணைப்பு, மீட்புத்துறையின் தலைவர் ஹென்டேரி அர்டிமன்சஷாஹ் தெரிவித்தார்.

பாரியோ-வில் உள்ள 20 அதிகாரிகள், இராணுவ வீரர்கள் உட்பட கிராமவாசிகள் ஆகியோர் தீயை அணைக்கும் முழுவீச்சில் ஈடுபட்டதாக ஹென்டேரி அர்டிமன்சஷாஹ் கூறினார்.

மாருடி தீயணைப்பு நிலையம் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து 460 கிலோமீட்டர் தொலைவிலும், தரைவழியாக 20 மணிநேர தொலைவிலும் இருப்பதால் உடனடியாக தடயவியல் பணியை மேற்கொள்வதற்கு அந்நிலையத்திலிருந்து MI17 ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டதாக ஹென்டேரி தகவலளித்தார்.

வீடு தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானதாகவும் தீயில் பாதிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் ஆராயப்படவில்லை என்று ஹென்டேரி மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்