மலேசிய நிதி சந்தை சீராக இயங்குவதை, பேங்க் நெகாரா உறுதிபடுத்தும்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிவரும் சூழலில், நாட்டின் நிதி சந்தை சீராகவும் செம்மையாகவும் செயல்படுவதை உறுதிபடுத்த, பேங்க் நெகாரா நடப்பிலுள்ள அதன் உத்திகளைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிதி சந்தையின் சூழலை தொடர்ந்து அணுக்கமாக கண்காணிக்கப்படும் வேளையில், நிதி சந்தையின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சிறந்த முறையில் கையாளப்படும்.

அவ்விவகாரம் தொடர்பில், முக்கிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறிய பேங்க் நெகாரா, பதற்றமான சூழல் தணியும் போது, நிதி சந்தையில் ஏற்படுகின்ற உறுதியற்ற சூழல் குறைந்து, மீண்டும் நிலைப்பெறும் என்பதில் அத்தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

நிதி சந்தையில், பணப்புழக்கம் போதுமாக உள்ளதையும் அந்நிய செலாவணி சந்தை சீராக இயங்குவதையும் தமது தரப்பு உறுதிபடுத்துமென பேங்க் நெகாரா அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

நேற்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலால், மலேசியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு, நிதி சந்தையின் நிலவரம் ஆகியவற்றை கண்காணித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்