சரவாக் முன்னாள் ஆளுநர் துன் அப்துல் தைப் மஹ்மூத் காலமானார்

சரவாக் மாநிலத்தின் நீண்ட கால முதலமைச்சராக சேவையாற்றியவரும், முன்னாள் ஆளுநருமான துன் அப்துல் தைப் மஹ்மூத் காலமானார். அவருக்கு வயது 87.

மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த தைப் மஹ்மூத், இன்று அதிகாலை 4.40 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமது இறுதி மூச்சை விட்டார்.

துன் அப்துல் தைப் மஹ்மூத் – டின் நல்லுடல் இன்று காலையில் கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவரின் சொந்த ஊரான சரவாக், கூச்சிங், ஜாலான் பகோ, டாமாக் ஜெயா- விற்கு விமானத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

சரவாக் மாநிலத்தை ஒரு நவீன மாநிலமாக உருவாக்குவதில் பெரும் பாடுபட்டவரான தைப் மஹ்மூத் கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை சரவாக் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார்.

மலேசியாவில் ஒரு மாநிலத்திற்கு நீண்ட காலம் அதாவது 33 வருடம் முதலமைச்சராக பதவி வகித்த பெருமையையும் இவரையே சேரும்.

இதேபோன்று 1970 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை சரவாக், Kota Samarahan நாடாளுமன்ற உறுப்பினராக சுமார் 38 ஆண்டுகள் வரை பதவி வகித்த பெருமையையும் இவரையே சேரும்.

2014 ஆம் ஆண்டு சரவாக் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தைப் மஹ்மூத், இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் 10 ஆண்டு காலம் வரை பொறுப்பை வகித்து வந்தார்.

தைப் மஹ்மூத் – டின் மரணம் தொடர்பில் சரவா மாநிலத்தில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபன் அறிவித்துள்ளார்.

மாநில கொடி இரண்டு நாள் அரை கம்பத்தில் பறக்க விடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார். தைப் மஹ்மூத் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிறந்த தேசிய வாதியை நாடு இழந்துள்ளது என்று அவர் வர்ணித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்