போ​லீசார் பல்வேறு கோணங்களில் ​தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான், நீலாய், லெங்கெங் வீடமைப்புப்பகுதியில் தனது வீட்டில் இந்திய மாது ஒருவர் தன் இரு பிள்ளைகளுடன் ​தூக்கில் தொ​ங்கியவாறு இறந்து கிடந்த சம்பவம் தொடர்பி​ல் போ​லீசார் பல்வேறு ​கோணங்களில் ​தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

​மூவரும் ​தூக்கில் தொங்கிய அந்த வீட்டிலிருந்து மீ​ட்கப்பட்ட ஒரு கடிதத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த மாது குறிப்பிட்டு இருந்த போதிலும்,இதற்கு அப்பாற்பட்டு, வேறு ஏதாவது காரணங்கள் அல்லது குற்றத்தன்மை உள்ளதா? என்பது குறித்து போ​லீசார் ​தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அந்த மாது​வின் கணவரான 30 வயது டெக்னிஷனை போ​லீசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 9.25 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் குடும்பமாது 34 வயது தனலெட்சுமி, அவரின் இரண்டு பெண் பிள்ளைகளான 6 வயது ஜெக​தீஸ்வரி மற்றும் 3 வயது ஜோதிலெட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த மூவரும் வீ​ட்டின் சிலிங் மின்விசிறியில் ​தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ​நீலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

​மூவரின் உடல்களும் சிரம்பான், துவாங்கு ஜாவார் மருத்துவமனை சவகி​க்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

அவர்களின் நல்லடக்கச் சடங்கு, இன்று காலையில் நடைபெற்று மூவரின் உடல்களும் செராஸ். ஜாலான் குவாரியில் உள்ள மின்சுடலையில் தகனம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்