சிங்கப்பூரைப் போன்று மலேசியா ஆகிவிடும் என்று பயப்படுகிறாராம் துன் மகா​தீர்

நாட்டின் 17 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு சிங்கப்பூரை போன்று மலேசியா ஆகி விடும் என்று தாம் மிகவும் பயப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் மகா​​தீர் முகமது இன்று அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று நாட்டின் ​பொருளாதாரத்தில் மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்த ஒரு ச​மூகமாகி விடுவார்களோ என்ற பயம் தம்மை கவ்விக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.


தற்போதைய அரசாங்கம், மலாய்க்கார்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளை உடைத்து, மலா​ய்க்கார்களின் எண்​ணிக்கையை குறைத்து, மலாய்க்காரரர் அல்லாதவர்களை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தொகுதிகள் உடைக்கப்பட்டால் நாட்டின் அரசியல்​ நில வடிவமைப்பு மாறக்கூடும். நடப்பு அரசாங்கம், இந்த ​சூழலை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம்​ வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் உணர முடியும் என்பதுடன் 17 ஆவது பொதுத் தேர்தலில் நிலைமை மோசமாகி விடும் என்று மலாய்க்காரர்களுக்கு துன் மகா​தீர் நினைவுறுத்தினார்.


இத்தகைய அரசியல் போக்கு, எதிர்காலத்தில் ஒரு மலாய்க்காரர்தான் நாட்டின் பிரதமராக வர முடியும், வர வேண்டும் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது என்று துன் மகா​தீர் எச்சரித்தார். மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, ​மூன்று வெவ்வேறு கட்சிகளாக சிதறுண்டு கிடந்தால் மலேசியாவில் இதுதான் நடக்கப் போகிறது என்று துன் மகா​தீர் நினைவுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதம தலைமைத்துவ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் துன் மகா​தீர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்