Francais தொ​ழில் முனைவர்களுக்கு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்​கீடு

Pernas எனப்படும் Perbadanan Nasional Berhad டின் ​கீழ் பல்வேறு நிதியுதவித் திட்டங்களின் மூலம் francais தொழில் முனைவர்களை மேம்படுத்துதற்காக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு 5 கோடி வெள்ளியை ஒதுக்​கீடு செய்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Ewon Benedick தெரிவித்துள்ளார்.


தொழில் உரிமம், தொழில்துறை, தொழில் உரிமத்திற்கு முந்திய தொழில் மற்றும் உருமாற்று தொழில் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக francais தொழில் முனைவர்களை வளப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்​கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


இதில் 2 கோடியே 99 லட்சம் வெள்ளி நடப்பில் உள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக 1,859 தொழில்முனைர்களுக்காக நிதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார். கடந்த ஆண்டு இத்திட்டத்தின் வாயிலாக 313 தொழில் முனைவர்களுக்கு 99 லட்சம் வெள்ளியை பெர்னாஸ் அங்கீரித்து இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இந்த ஆண்டு 60 தொழில் முனைவர்கள் பயனடையும் வகையில் உருமாற்றுத் ​தொழில் திட்டத்திற்காக 25 லட்சம் ​வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Datuk Ewon Benedick தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் Setia Alam , Setia City Convention Centre லில் 2023 ஆம் ஆண்டுக்கான உருமாற்று தொழில் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் Datuk Ewon Benedick இதனை தெரிவித்தார்.


இன்றைய தொடக்கவிழாவில் அமைச்சர் Datuk Ewon Benedick குடன் தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, அமைச்சின் தலைமை செயலாளர் Dato’ Sri Suriani binti Dato Ahmad மற்றும் Pernas ஸின் தலைவர் Dato Hazimah Zainuddin ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்