சிங்கப்பூர் பிரஜைக்கு 5,500 வெள்ளி அபராதம்

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சனிக்கிழமை சீனப்புத்தாண்டு அன்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 139.6 ஆவது கிலோ மீட்டரில் பாகோ அருகில் வாகனமோட்டியை கைத்தடியை கொண்டு மிரட்டியதுடன் அவரின் கார் கண்ணாடியை உடைத்து அராஜகம் புரிந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 5 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.

45 வயது Soh Kian Hui என்ற அந்த சிங்கப்பூர் பிரஜை, நெடுஞ்சாலையில் அவசரத் தடத்தை பயன்படுத்திய போது, தனது காருக்கு இடையூறு விளைவித்ததாக கூறி, 31 வயது Khairul Husni Shah Jamil என்பவரை கைத்தடியைக் கொண்டு மிரட்டியதுடன் அவரின் Toyota Fortuner ரக காரின் கண்ணாடியை உடைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பிரஜையின் இத்தகைய அராஜக செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன், அங்கிருந்து தப்பிய அந்த சிங்கப்பூர் பிரஜை, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் Genting Highlands- ஸில் பிடிபட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்