பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் ​​தீர்மானமா? எந்தவொரு அறிகுறியும் இல்லை

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் ​தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டம் கொண்டுள்ளனவா ? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும் அது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு ​​தீர்மானத்தையும் தாங்கள் பெறவில்லை என்று மக்களவை​ சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.

இது போன்ற நம்பிக்கையில்லாத் ​தீர்மானத்தை கொண்டு வர வேண்டுமானால், வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நாடாளுமன்றக்கூட்டம் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே ​தீர்மானத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று Johari Abdul குறிப்பிட்டார்.

​தீர்மானத்தை கொண்டு வருவது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையாகும். ஆனால், அந்த ​தீர்மானத்தை அவைக்கு கொண்டு வருவதா? இல்லை? என்பது தொடர்பில் அதன் உள்ளடக்கத்தை தமது அலுவலகம் முதலில் ஆராயும் என்று சபா நாயகர் Johari Abdul தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்