சிங்கப்பூர் பிரஜை கைது செய்யப்பட்டார்

ஜொகூர் பாரு,பிப்ரவரி 27 –

ஜொகூர் பாருவில், கடந்த 13 ஆண்டுகளாக ஆவணமற்ற சட்டவிரோதக் குடியேற்றவாசியாக இருந்து வந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மஜ்லிஸ் பண்டாராயா ஜொகூர் பாரு மற்றும் மஜ்லிஸ் பண்டாராயா பாசிர் கூடாங் ஆகியவற்றுடன் இணைந்து மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 34 வயதுடைய அந்நபர் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சோதனையின் போது சட்டவிரோதமாக செயல்பட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் பஹாருடின் தாஹீர் கூறினார்.

முன்னதாக, ஜாலான் வாடிஹானா வில் சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் இருப்பதாகவும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதியின்றி கடைகளை நிறுவதை குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பஹாருடின் தாஹீர் விவரித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட அந்நபர்கள் செதியா த்ரோபிக்கா குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் இதுக்குறித்து மலேசிய குடிநுழைவுத்துறை அனைத்து அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று பஹாருடின் தாஹீர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்