1,200 புறநகர் தொழில்முனைவர்களுக்கு இலக்கவியல் திட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 27 –

புறநகர், தொழில்முனைவர்களுக்கான இலக்கவியல் திட்டத்தின் மூலம் 1,200 புறநகர் தொழில்முனைவர்கள் இவ்வாண்டு இலக்கவியல் திட்டத்திற்கு உருமாற்றம் செய்வதை புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சு பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு,KKDW வியூக அமைச்சருடன் ஒன்றிணைந்து 1.7 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், 12 மோடுயில்ஸ் யின் கீழ் தொழில்முனைவர்களுக்கான இலக்கவியல் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இத்திட்டம் புறநகர் தொழில்முனைவோர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன் இலக்கவியலின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்வதே அமைச்சகத்தின் முக்கிய முயற்சியாகும் என்று புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ரம்லான் பின் டத்தோ ஹருன் கூறினார்.

புறநகர் தொழில்முனைவோர்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்புடைய நிலையில் இணையத்தளங்களில் வணிகத்தை நடத்துவதற்கு ஒரு தளமாக அமையும் என்று டத்தோ ஶ்ரீ ரம்லான் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்