சித்தி பைனுனின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவுக்கு ஆளான 13 வயது பெல்லா எனும் சிறுமியை துன்புறுத்தியதோடு அவரை முறையாக பராமரிக்காதது ஆகிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த தண்டனைக்கு எதிராக, ரூமாஹ் பொண்டா பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் சித்தி பைனுன் அஹ்மத் ரசாலி செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அந்த தகவலை கோலாலம்பூர் நீதிமன்றத்தின் மூத்த பதிவதிகாரி அசிசா ஜாபார் இன்று உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்பு, சித்தி பைனுன் மீதான மேல்முறையீட்டின் தீர்ப்பை அறிவிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெல்லாவை துன்புறுத்தியது, அவரை முறையாக கவனிக்காதது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை சித்தி பைனுன் புரிந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கோலாலம்பூர் சேசியேன் நீதிமன்றம் கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்