2 ஹெலிகப்டர்கள் விபத்து குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்

லுமுட், ஏப்ரல் 24-

பெராக், லுமுட்டிலுள்ள அரச மலேசிய கடற்படை தளத்தில், 10 பேரின் உயிரை பலிகொண்ட இரு ஹெலிகப்டர்களை உட்படுத்திய விபத்து குறித்து, விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வது அவசியம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ தகியுடின் ஹாசன் தெரிவித்தார்.

அவ்விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சகம் சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை தயார் செய்வதற்கு எவ்வித காலவரையை நிர்ணயிக்காவிட்டாலும், அதை துரிதப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக தகியுடின் ஹாசன் விவரித்தார்.

சம்பந்தப்பட்ட விபத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு கடற்படைக்கும் நாட்டிற்கும் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது என தகியுடின் ஹாசன் தமது அறிக்கையில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்