சிப்பி இறக்குமதிய கட்டுப்படுத்தியது சிங்கப்பூர்

சிங்கப்பூர், ஏப்ரல் 06-

போர்ட்டிக்சன் கடற்பகுதியிலிருந்து லாலா வகையைச் சேர்ந்த சிப்பியை இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் கட்டுப்படுத்தியுள்ளது.

அவ்வகையை சேர்ந்த சிப்பியில் Biotoxin எனப்படும் உயிர் நச்சு அமிலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர், அதனை உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் உணவு வாரியம், மலேசிய மீன் வளத்துறையிடமிருந்து இதனை உறுதிப்படுத்திய பிறகு Lala வகையைச் சேர்ந்த சிப்பிகளின் இறக்குமதியை சிங்கப்பூர் கட்டுப்படுத்தியுள்ளது.

போர்ட்டிக்சன் கடற்பகுதியில் சேகரிக்கப்பட்ட சிப்பிகளை உண்டதன் விளைவாக அவ்வட்டாரத்தை சேர்ந்த எண்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வகை சிப்பிகளை பரிசோதனை செய்யப்பட்டத்தில் உயிர் நச்சு இருப்பதை மலேசிய மீன் வள இலாகா உறுதி செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்