சிறார்கள் டிக் டோக் கணக்கு வைத்திருப்பது பரிசீலிக்கப்படும்

பதிமூன்று வயதுக்கு கீழ்பட்ட மாணவர்கள் டிக் டோக் கணக்கு உரிமை வைத்திருப்பதை பரிசீலிக்குமாறு அந்த சமூக வலைத்தளத்தை நிர்வகித்து வரும் நிறுவனத்தை தொடர்புத் துறை அமைச்சு கேட்டுக்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் டிக் டோக் கணக்கு உரிமையை கொண்டுள்ள பயனர்கள் 13 வயது மற்றும் அதற்கு மேல்பட்ட வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள் பலர் தங்களின் குழந்தை பருவத்திலேயே டிக் டோக் கணக்கை வைத்துள்ளனர். இதில் தமது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியும் அடங்கும். இது உண்மையிலேயே கவலை அளிப்பதாக உள்ளது என்று ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்