சிறுவர்களுக்காக ‘The Stack Lab’ அதிகாரப்பூர்வ தொடக்க விழா

பெற்றோர்களின் அன்றாட வாழ்க்கை சூழலில் பிள்ளைகளை கவனித்துக் கொள்வதற்கு போதுமான நேரம் கிடைக்காத நிலையில் சிறுவர்களின் கற்றல் திறனையும் கைத்திறனையும் வளர்த்து கொள்ளும் முயற்சியாக பிளாஸ்டிக் தட்டைகளை இணைத்து பூட்டும் விளையாட்டு சாதனமான ‘The Stack Lab’ இன்று அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

Plantastic 10 Sdn Bhd நிர்வனத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் Dato Seri Darwin Rajamoney முன்னிலையில் கோலாலம்பூர், Batu -வில் உள்ள தனது சேவை மையத்தில் அதன் எம்.பி. P. பிரபாகரன் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.

குழந்தைகள் சிறுவயதிலிருந்து பெற்றோர்களின் உதவியின்றி சுயமாகவே அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தி கொள்வதுடன் கைத்தொலைப்பேசி பின் விளைவுகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் ‘The Stack Lab’ பெறும் பங்காற்றும் என்று அதன் தயாரிப்பாளர் Rene Bernau தெரிவித்தார்.

குழந்தைகளின் சிந்தனையாற்றலை வளர்க்கும் ‘The Stack Lab’ விளையாட்டு சாதனம் 487 பிளாஸ்டிக் துண்டுகளாக 50 விதமாக இருப்பதுடன் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாரளமாக வாங்கி பயன்படுத்தக்கூடிய பொருட்களாக இவை திகழ்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த ‘Lego’ என்கிற விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து ஊக்குவிக்காமல் மலேசியாவில் ஓர் இந்தியர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ‘The Stack Lab’ சாதனத்தை வாங்கி ஆதரளிக்குமாறு பிரபாகரன் கேட்டுக் கொண்டார். பி40 பிரிவினை சேர்ந்த குழந்தைகளுக்கும் இதை வாங்கி தந்து தம்முடைய பங்களிப்பினை வழங்குவதாக பிராபகரன் உறுதியளித்தார்.

இத்திட்டம் நிச்சயம் சிறுவர்களின் சிந்தனையாற்றலை வளர்த்து கொள்வதற்கும் ஆரம்ப பள்ளியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் அவர்களை தயார் படுத்துவதற்கு பெறும் பங்காற்றும் என்று பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்