சிலாங்கூர் சுல்தானுக்கு பிரதமர் அன்வார் நன்றி

நாட்டில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டமே, நீதித்துறை பரிபாலனத்தின் உச்ச சட்டமாகும். அச்சட்டத்தை மலேசியர்கள் அனைவரும் மதித்திட வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ள மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் இட்ரிஸ் ஷாவுக்கு அரசாங்கம் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவர் என்ற முறையில் சுல்தான் Sharafuddin Idris Shah- வின் இந்த அறிவிப்பானது, நாட்டின் அரசியலமைப்பு சட்டமே மேலானது என்ற ஒரு தெளிவுரையை வழங்கியுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கிளந்தான் மாநிலத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஷரியா குற்றவியல் சட்டத்தின் 18 விதிகளுள் 16 விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் இன்று ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்