சிலாங்கூர், நெகிரி செம்பிலானிலுள்ள 3 நிவாரண மையங்களில் 400-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

நேற்று பெய்த கனமழையால் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் சுங்கை பூலோவிலும் சுபாங்கிலும் நேற்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று இரு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில், 88 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

மேலும், நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று அதிகாலை மணி 4.08 அளவில், ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ள வேளையில், இரு குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அதில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, மாநில இயற்கை பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவும் பொது தற்காப்பு படையும் அறிக்கை ஒன்றில் கூறியிருந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

இன்று காலை மணி 7 அளவில், லிங்கி மற்றும் திரியாங் ஆறுகளில், நீர்மட்டம் அபாய அளவில் பதிவாகியுள்ளதாகவும் அவை கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்