சில கைதிகளுக்கு வீட்டுத் தடுப்புக்காவல் அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புதல்

புன்சாக் போர்னியோ, மார்ச் 2 –

நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைந்த சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளில் சிலரை , சிறைச்சாலைக்கு பதிலாக வீட்டுக் காவலில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தங்களின் சிறைவாசத்தை முடிப்பதற்கு குறைந்த காலமே எஞ்சியிருக்கும் கைதிகள், சிறைச்சாலையில் வைக்கும் நிலை இருக்காது. மாறாக, அவர்கள் வீட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்படும் நிலை இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.

எனினும் நன்னடத்தைமிக்க தகுதிவாய்ந்த கைதிகளுக்கு மட்டுமே அரசாங்கம் இத்தகைய சலுகையை காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்கு இத்தகைய அனுகூலத்தை வழங்குவதற்கு நடப்பு சட்டம் பொருந்துமா? அல்லது அந்த சட்டத்தில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டுமா? என்பதை உறுதி செய்வதற்கு சட்ட ரீதியான அம்சங்களை உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் சைபுடின் தெரிவித்தார்.

சிறைத் சாலை தலைமை இயக்குநர் அல்லது உள்துறை அமைச்சர் அதிகாரத்தின் கீழ் உள்ள சட்டங்கள் , இந்த சலுகையை வழங்குவதற்கு போதுமானதா? அல்லது அவற்றில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டுமா ? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அ மைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்