சிஸ்டர் என்டா ராயான்க்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கண்ணீர் அஞ்சலி

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 11 –

தனது 96 ஆவது வயதில் காலமான பெட்டாலிங் ஜெயா, அசுந்தா இடைநிலைப்பள்ளியின் தோற்றுநரும், அப்பள்ளி வாரியத்தின் தலைவருமான சிஸ்டர் என்டா ராயான்வின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. சிஸ்டர் என்டா ராயான் நல்லுடலுக்கு நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், பொது இயக்கங்களின் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று காலை 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, St. Francis Xaviers தேவாலயத்தில் சிஸ்டர் என்டா ராயானின் உடல் கிடத்தி வைக்கப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு பிறகு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, முன்னாள் மாணவர்கள் புடை சூழ சிஸ்டர் என்டா ராயான்வின் உடலைத் தாங்கிய பிரேத வண்டி, அவர் தோற்றுவித்த அசுந்தா பள்ளி வளாகத்தையும், மருத்துவமனையையும் வலம் வந்து, அந்த கன்னியாஸ்திரியின் அருஞ்சேவைக்கு நன்றி தெரிவித்து, அவரின் இறுதிப்பயணத்திற்கு பிரியாவிடை தந்த போது சோகமே உருவானது.

அயர்லாந்தில் பிறந்து வளர்ந்து , மலாயா முன்னாள் தலைமை நீதிபதி Sir Michael Hogan அழைப்பின் பேரில் கல்விப்பணியை மேற்கொள்ள 1954 ஆம் ஆண்டு மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட சிஸ்டர் என்டா ராயான் , பெட்டாலிங் ஜெயாவில் அசுந்தா பள்ளியை நிறுவினார்.

தவிர, சிறிய அளவில் Ave Maria Clinic ஒன்றை திறந்து தொண்டுப்பணியை தொடங்கிய சிஸ்டர் என்டா ராயான்வின் அந்த கிளினிக்-தான் பின்னாளில் பெட்டாலிங் ஜெயாவில் அசுந்தா மருத்துவமனையாக உருவாக்கம் கண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்