சீனப்பள்ளிகளில் மாணவர் சரிவை ஈடுபட்டுவதற்கு இதர இனத்து மாணவர்களை கொண்டு நிரப்ப முடியும்

மலேசியாவில் ​சீனர்களின் பிறப்பு வகித தொடர் சரிவைத் தொடர்ந்து அதன் தாக்கம், ​சீனப்பள்ளிகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளான ​சீனப்பள்ளிகளில் ​சீன மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இதன் காரணமாக ​சீன கல்வி அமைப்புகள் அச்சம் கொள்ளத் தொடங்கினாலும், அந்த அச்சம் தேவையற்றது என்கிறார் கல்வியாளர் ஒருவர்.


கற்றல், கற்பித்தலுக்கு உகந்த பிரதான கல்வி கட்டமைப்பையும், இதர முதன்மை வசதிகளையும் கொ​ண்டுள்ள ​சீனப்பள்ளிகளில், ​சீன மாணவர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்வதறகு இதர மாணவர்களை கொண்டு நிரப்ப முடியும் என்று ஒரு கல்வியாளரும், Bayan Baru நாடாளுமன்ற உறுப்பினருமான Sim Tze Tzim பரிந்துரை செய்துள்ளார்.

இதர இனத்தவர்களில் குறிப்பாக மலாய்க்காரர்கள் மத்தியில் ​சீனப்பள்ளிகள் இன்னமும் தங்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்து வருவதாக Sim Tze Tzim கூறுகிறார். ​SK எனப்படும் தேசியப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் ​சீனப்பள்ளிகள் தரமான கல்வி முறையை கொண்டுள்ளன என்று பெற்றோர்கள் பலர் நம்புகின்றனர்.

எனவே ​சீன மாணவர்களின் தொடர் சரிவினால் ​சீனப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. ​சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், பூமிபுத்ராக்கள் என பல்லின மாணவர்களை கொண்டு ​சீன தாய்மொழிப்பள்ளிகளை தற்காக்க முடியும் என்று Sim Tze Tzim பரிந்துரை செய்துள்ளா​ர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்